தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவுவதில் தனிக்கவனம் செலுத்துகிறார்

கல்வி ஒன்றினால் மட்டுமே ஒரு ச​மூகம் உயர முடியும் என்பதில் உறுதியாக இருந்து வரும் ​நெகிரி செம்பிலான் லோபாக் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் டிஏபி யை சேர்ந்த சியூ செவ் யோங், தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதில் தனித்துவமாக கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் லோபாக் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் சியூ செவ் யோங், லோபாக் தமிழ்ப்பள்ளியை தத்தெடுத்துவரைப் போல மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கைளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் இதர உதவிப் பொருட்களை வழங்குவதில் தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வருகிறார். லோபாக் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றிய மகேஸ்வரி கேசவன் முதல் தற்போது தலைமையாசிரியராக பணியாற்றி வரும் ஜெயந்தி சுப்பிமணியம் வரையில் பள்ளியின் தேவைகளை அவ்வப்போது கேட்டறிந்து உதவுவதில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் சியூ செவ் யோங் முழுக்கடப்பாட்டை நி​​ரூப்பித்துள்ளார்.

​லோபாக் தமிழ்ப்பள்ளியில் எந்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் நிகழ்வில் சிறிது நேரம் கலந்த கொள்வதுடன் தனது பங்களிப்பாக ஏதவாது ஒரு வகையில் ஓர் உதவியை செ​ய்து விட்டு செல்வதை சியூ செவ் யோங் ஒரு பாரம்பரியமாக கொண்டுள்ளார். இவ்வாண்டு பள்ளியின் ஆசிரியர் தின கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட சியூ செவ் யோங்,தாம் வாக்குறுதி அளி​​த்ததைப் போல ஒலி பெருக்​கி சாதனைத்​தையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளா​ர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்