தமிழ்ப்பள்ளிக்கு 30 ஆண்டுகாலம் உதவி செய்த சீன இரப்பர் வியாபாரி

பேரா, சித்தியவான் பகுதியைச் சேர்ந்த சீன இரப்பர் வியாபாரி ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்ப் பள்ளிக்கு உதவி செய்து வருகிறார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, யெக் டொங் பிங் என்பவர் 3 இலட்சத்து 30 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான நிலத்தை, ஆயெர் தாவாரில் ஒரு விவசாய நிலத்தை வாங்கி ஆயெர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குக் கொடுத்திருக்கிறார்.

யெக் டொங் பிங் வாங்கிக் கொடுத்த அரை ஏக்கர் நிலத்திற்கு அவர் வாடகையை விதிக்கவில்லை. அதே நேரம், அந்த நிலத்திற்கான வரியையும் அவரே செலுத்தி வந்தார் என மைசின்சு செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அந்த நிலத்தில் சீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக அதனை வாங்க யெக் டொங் பிங் ஐ அந்தப் பள்ளியின் நிர்வாகம் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்

ஏக்கருக்கு 2 இலட்சம் வெள்ளி மதிப்புடைய நிலமாக இருந்தபோதிலும், கிட்டத்தட்ட மூன்று ஏக்கர் நிலத்தை 4 இலட்சத்திற்கு மட்டுமே பள்ளி நிர்வாகத்திடம் விற்க யெக் ஒப்புக்கொண்டார். ஆனால், பள்ளி நிர்வாகத்திடம் போதிய நிதி இல்லாததால், 3 ஏக்கர் நிலத்தை 3 இலட்ச வெள்ளிக்குக் கொடுப்பதாக யெக் சம்மதம் தெரிவித்தார்.

1938ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியின் நிர்வாகத்தினர், யெக் இன் கொடை பண்பை பாராட்டி நன்றியும் தெரிவித்துள்ளனர்.

பள்ளியின் நிகழ்ச்சிகளுக்கு நிதியுதவி வழங்குவதோடு ஒவ்வோர் ஆண்டு சீனப் புத்தாண்டின்போது, அவர் ஆரஞ்சுப் பழங்களைப் பள்ளிக்கும் வழங்கி வருகிறார்.

தாம் பெரும் பணக்காரர் இல்லை என்றாலும், தமது வீட்டின் வாடகையைத் தாமே செலுத்தும் அளவுக்கு தம்மால் இயங்க முடிகிறது எனக் கூறும் யெக். தமது இரப்பர் தோட்டத்தில் பால் மரம் சீவும் இந்தியர்த் தொழிலாளர்களுக்குத் தம்மல் முடிந்த நன்றிக் கடனாக இந்த உதவிடைப் பார்ப்பதாக மைசின்சுவிடம் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்