தமிழ், சீனப்பள்ளிகள் மீதான சர்ச்சை வேண்டாம் பாடத்திட்டத்தில் கவனம் செலுத்துவீர் – முன்னாள் மூத்த அமைச்சர் ரபிடா அசிஸ் வலியுறுத்து

கோலாலம்பூர், மார்ச் 13 –

இந்த நாட்டில் தமிழ், சீன தாய்மொழிப்பள்ளிகள் தேவையா? தேவையில்லை? என்பது குறித்து வாதிட்டுக் கொண்டும், சர்ச்சை செய்துக் கொண்டும் இருப்பதை காட்டிலும் ஆசிரியர்களின் தரம், பாடத்திட்டத்தின் உள்ளடக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் மூத்த அமைச்சர் டான் ஶ்ரீ ரபிடா அசிஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ், சீன தாய்மொழிப்பள்ளிகள் நாட்டின் ஒற்றுமைக்கு பேதங்களையும் பிளவுகளையும் ஏற்படுத்துகின்றன என்பதில்தான் அரசியல்வாதிகள் சர்ச்சை செய்து கொண்டும் வாதிட்டு கொண்டும் இருக்கின்றனர்.

தம்மை பொருத்தவரை இவ்வாறு சர்ச்சை செய்து கொண்டிருப்பதை காட்டிலும் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் தரத்தை உயர்த்துவதற்கு பயிற்சி பெற்ற தரமான ஆசிரியர்களை உருவாக்குவதிலும் பாடத்திட்டத்தின் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதிலும் தீவிர கவனம் இருக்க வேண்டும் என்று ரபிடா அசிஸ் கேட்டுக் கொண்டார்.

ஒரு நாடு மற்றும் மக்களின் மேன்மைக்கு கல்வித்திட்டங்களின் உள்ளடக்கம் குறித்தே பேச வேண்டுமே தவிர அது தாய்மொழிப்பள்ளியா இல்லையா என்ற பேதங்களை விதைக்கும் சர்ச்சை அவசியமற்றது என்று அம்னோவின் முன்னாள் மகளிர் தலைவியும், முன்னாள் அனைத்துலக வாணிப, தொழித்துறை அமைச்சருமான ரபிடா அசிஸ் வலியிறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்