தவறை சுட்டிக்காட்டியவரை பதவி விலகச் சொன்ன நேபாளம்! பொருளாதார ஆலோசகர் சிரஞ்சீவி நேபாள் ராஜினாமா!

நேபாளம், மே 21-

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் அரசியல் மாற்றங்கள் சர்ச்சைகளை எழுப்பியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுடனான நேபாளத்தின் உறவு முன்பு இருந்ததைப் போல சுமூகமானதாக இல்லை.  தற்போது புதிய வரைபடம் மற்றும் கரன்சி நோட்டு தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்தியாவின் மூன்று பிரதேசங்களை உள்ளடக்கிய புதிய வரைபடத்துடன் புதிய கரன்சி நோட்டுகளை வெளியிடுவதாக நேபாளம்  அறிவித்தது தொடர்பாக அந்நாட்டில் பிரச்சனை வெடித்துள்ளது.

நேபாளம் மற்றொரு முட்டாள்தனத்தை செய்ய வேண்டாம் என அதன் தவறை சுட்டிக்காட்டியவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று இந்திய பிரதேசங்களை சித்தரிக்கும் புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிடும் அரசாங்கத்தின் முடிவு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததையடுத்து, நேபாள ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் ராம் சந்திர பாடேல் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

கடந்த வாரம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய 100 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் போது, பழைய வரைபடத்தை புதியதாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. புதிய வரைபடத்தில் கலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா போன்ற பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு இந்தியா ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தது.

புதிய 100 ரூபாய் நோட்டில் இந்தியாவின் அதிகார வரம்பிற்குள் வரும் இடங்கள் இடம் பெறும் என்பது தவறு என்பதை சுட்டிக்காட்டிய ஆலோசகர் பதவி விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால், ரூபாய் நோட்டுகளில் அச்சிடுவதால்  யதார்த்தத்தை மாற்ற முடியாது என்பதை நேபாளம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நேபாள அதிபரின் ஆலோசகர் விளக்கம் அளிக்க முயன்றபோது, ​​அது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் ஆட்சி எல்லைக்குள் இருக்கும் லிபுலேக், கலாபானி மற்றும் லிம்பியாதுராவை நேபாளத்தின் வரைபடத்தில் சேர்ப்பது சரியில்லை என்று நேபாள அதிபரின் பொருளாதார ஆலோசகர் சிரஞ்சீவி தெரிவித்ததற்கு அந்நாட்டில் பரவலாக கண்டனங்கள் எழுந்தன. 

இதனையடுத்து, அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற, அரசின் ஒப்புதலுடன் நேபாள அதிபர் ராம் சந்திர பவுடலின் பொருளாதார ஆலோசகர் பதவி விலகினார். சிரஞ்சீவி நேபாள் என்ற அதிபரின் ஆலோசகரின் ராஜினாமாவுக்கு அதிபர் பவுடல் நேற்று ஒப்புதல் அளித்ததாக ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த சிரஞ்சீவி நேபாள்?


சிரஞ்சீவி நேபாளம் நேபாளத்தின் மத்திய வங்கியின் ஆளுநராகப் பணியாற்றிய பொருளாதார வல்லுநர் என்பது குறிப்பிடத்தக்கது. சிரஞ்சீவி நேபாளத்தின் கருத்துக்கள் தவறு என, CPN-UML தலைவரும், முன்னாள் பிரதமருமான KP சர்மா ஒலி  பகிரங்கமாக விமர்சித்தார்.

சீனாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் KP சர்மா ஒலி தலைமையிலான நேபாள அரசாங்கம், 2020 மே மாதம் அதன் புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்ட்போது, அதில் லிபுலேக், கலாபானி மற்றும் லிம்பியாதுரா பகுதிகள் அடங்கியிருந்தன.   

சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய ஐந்து இந்திய மாநிலங்களுடன் நேபாளம் 1,850 கிமீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்