தாம் இன்னமும் பெர்லிஸ் மாநில எம்.பி.தான்

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் பெர்லிஸ் மந்திரி பெசார் முகமது சுக்ரி ரம்லி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு, எஸ்.பி.ஆர்.எம் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட போதிலும் தாம் இன்னமும் மந்திரி பெசாராக பொறுப்பில் இருந்து வருவதாக இன்று அறிவித்துள்ளார்.

தமக்கு எதிராக எஸ்.பி.ஆர்.எம் மேற்கொண்டு வரும் புலன் விசாரணை, பெர்லிஸ் மந்திரி பெசார் என்ற முறையில் தனது பதவியை பாதிக்கச் செய்யவில்லை என்று அவர் விளக்கினார்.

எஸ்.பி.ஆர்.எம் விசாரணைக்கு தாம் ஆளாகியுள்ளதால், பதவி விலக வேண்டும் என்று சமூக ஊடகங்களில் மட்டுமே வலியுறுத்தப்பட்டு வருகிறதே தவிர கட்சியின் அடிமட்ட மக்களோ அல்லது மாநில நிர்வாகமோ தம்மை அவ்வாறு கேட்டுக்கொள்ளவில்லை என்று பெரிக்காத்தான் நேஷனலின் பெர்லிஸ் மாநில தலைவருமான முகமது சுக்ரி ரம்லி, தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்