தொழிற்சாலைக்கு வெளியே வாயு பரவவில்லை

சுங்கை பெட்டானி, ஜுன் 28-

கெடா, பக்கார் அரங்க் தொழிற்பேட்டையில் உள்ள ரப்பர் கையுறை தயாரிப்புத் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்ததில் 22 ஊழியர்கள் பாதிக்கப்பட்ட போதிலும் அந்த நச்சு வாயு, தொழிற்சாலைக்கு வெளியே பரவவில்லை என்பது தெரியவந்துள்ளதாக சுற்றுச்சூழல் இலாகா தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அந்த தொழில் பேட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இது தெரியவந்ததாக கெடா மாநில இயக்குநர் ஷரீபா ஜக்கியா சையத் சாஹப் தெரிவித்துள்ளார்.

அந்த தொழிற்சாலையில் எவ்வாறு அந்த நச்சு வாயு கசிந்தது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

அமோனியா கசிவினால் அந்த தொழிற்சாலையில் 22 தொழிலாளர்கள் வாந்தி, மயக்கம், மூச்சுத் திணறல் போன்ற உபாதைகளுக்கு ஆளானதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்