தொழிற்சாலையில் இராசயண கசிவு; ஒருவர் மயக்கமடைந்த வேளை,16 பேர் கண் தலை வலிக்கு இலக்காகினர்

சுங்கை பெட்டானி, ஜுன் 28-

கெடா, சுங்கை பெட்டானி, பகர் அரங்க் தொழிற்பேட்டையிலுள்ள ரப்பர் கையுறைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில், 60 லிட்டரிலான SODIUM HYPOCHLORITE இரசாயனம் கசிந்ததில், ஒரு தொழிலாளர் மயக்கமுற்றார்.

16 தொழிலாளர்கள் கண் எரிச்சலுக்கும் தலை வலிக்கும் இலக்காகினர்.

நேற்று மாலை மணி 3.04 அளவில் அச்சம்பவம் குறித்து தகவல் பெறப்பட்டதை அடுத்து, சுங்கை பெட்டானி தீயணைப்பு மீட்பு நிலையத்திலிருந்து 16 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மயக்கமடைந்த தொழிலாளர் சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட வேளை, கண் எரிச்சலுக்கு இலக்கான மூவரை தொழிற்சாலை தரப்பினர், அருகிலுள்ள கிளினிக்கிற்கு அனுப்பி வைத்தனர்.

எஞ்சிய அறுவருக்கு கண் எரிச்சலும் தலை வலியும் ஏற்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் தீயணைப்பு துறையின் அவசரகால மருத்துவ மீட்பு சேவை – EMRS வேனில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர், KULIM HI- TECH தீயணைப்பு நிலையத்திலிருந்து வரவழைக்கப்பட்ட அபாயகர ரசாயன பொருள்களை அகற்றும் குழுவினர், நீரை பயன்படுத்தி அவ்விடத்தை தூய்மைப்படுத்தினர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்