தொழிற்சாலை ஊழியர் மீது குற்றச்சாட்டு*

Islamic State எனும் ஐ.எஸ். ( I.S.) தீவிரவாதக் கும்பலுக்கு ஆதரவு நல்கியதாக தொழிற்சாலை ஊழியர் ஒருவர், ஜோகூர், Kota Tinggi மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

Suhaini Sarwan என்ற அந்தப் பெண் ஊழியர், மாஜிஸ்திரேட் Hayda Faridzal Abu Hassan முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

கடந்த மே 30 ஆம் தேதி Kota Tinggi, Taman Daiman Jaya, Jalan Baiduri என்ற இடத்தில் தீவிரவாத கும்பல் தொடர்புடைய கட்டுரைகளை தனது மடிக்கணினியில் அந்தப் பெண் பதிவேற்றம் செய்து வைத்துள்ளார்.

தவிர, Kota Tinggi, Felda Lok Heng Barat என்ற முகவரியில் ஐ.எஸ்.தீவிரவாத கும்பல் தொடர்புடைய இரண்டு புத்தகங்களை வைத்திருந்ததாக 46 வயதுடைய அந்தப் பெண் இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

இவ்வழக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலிருந்து ஜோகூர்பாரு, உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் அந்தப் பெண்ணிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை..

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்