நாட்டிங்காம் போரெஸ்ட் PGMOL- இடம் VAR ஆடியோவை கேட்டு கோரிக்கை விடுத்துள்ளது.

இங்கிலாந்து, ஏப்ரல் 23-

ஞாயிற்றுக்கிழமை அன்று, நாட்டிங்காம் போரெஸ்ட்-க்கும் எவெர்ட்டன்-க்கும் இடையிலான பிரீமியர் லீக் போட்டியில் 2-0 என கோல் கணக்கில் எவெர்ட்டன் வெற்றி பெற்றது.

விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த போட்டியில் நாட்டிங்காம் போரெஸ்ட்க்கு 3 முறை பெனால்டி கிடைத்த போதிலும் VAR நடுவரான ஸ்டூவர்ட் அட்வெல்  அதை குடுக்க மறுத்துவிட்டார்.

ஆட்டத்தின் போது 3 வெவ்வேறு பெனால்டி கிடைக்கும் தருணத்தை  திடலில் இருக்கும் நடுவரான அந்தோணி டெய்லர் ரத்து செய்ததற்க்கு காரணமாக இருந்தவர் VAR நடுவரான ஸ்டூவர்ட் அட்வெல் தான் என நோட்டிங்காம் போரெஸ்ட் அணி நம்புகிறது.

திங்கட்கிழமை அன்று, நாட்டிங்காம் போரெஸ்ட் PGMOL-க்கு ஓர் அறிக்கை விடுத்துள்ளது. அதில், இரு நடுவர்களுக்கு இடையிலான உரையாடல்களை வெளியாக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

மூன்று முக்கியமான நிகழ்வுகளின் ஆடியோக்களை அந்த அணி PGMOL-இடம் கேட்டுக் கோரிக்கை விடுத்துள்ளது. 24, 44, 56-ஆம் நிமிடங்களில் ஏற்பட்ட மோதல்கல் மற்றும்  ஆடுகையில் பந்தும் கிடைத்தும் நோட்டிங்காம் போரெஸ்ட்க்கு பெனால்டி வழங்கப்படவில்லை

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்