நாட்டின் நீதித்துறை மடிந்து விட்டதா?

நஜீப் துன் ரசாக்கின் சிறைத் தண்டனையை மன்னிப்பு வாரியம் குறைத்து இருப்பது மூலம் இந்த நாட்டின் நீதித்துறை மடிந்து விட்டதா? என்று மலேசிய லஞ்ச ஊழல் ஆணையத்தின் சிறப்பு நடவடிக்கைகளுக்கான முன்னாள் இயக்குநர் பஹ்ரி முகமது ஜின் கேள்வி எழுப்பியுள்ளார்.

நஜீப்பின் தண்டனை காலத்தை பாதியாகக் குறைப்பதற்கு மன்னிப்பு வாரியம் எடுத்துள்ள முடிவானது, பெரும்பான்மையான மக்களுக்கும், அதிகாரத்தில் உள்ள பணக்காரர்களுக்கும் இடையில் காட்டப்படுகின்ற சலுகையின் வித்தியாசத்தை காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் சட்டத்திற்கு இணங்க குற்றம் இழைந்த ஏழை மக்கள் கட்டாயமாக நீதித்துறையினால் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை நாம் ஒப்புக்கொள்கிறாம். அதேவேளையில் செல்வாக்குப் படைத்தவர்கள் தண்டனை காலத்தை நூறு விழுக்காடு கடைப்பிடிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. தண்டனை காலத்தில் பாதி அனுபவித்தால் போதும் என்பதை முடிவெடுக்கும் இன்னொரு பரிபாலனமும் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
.
தற்போதைய நீதித்துறை மீது ஒட்டுமொத்த மலேசியர்கள் எத்தகைய கண்ணோட்டம் கொண்டுள்ளனர் என்பதை கணிக்க மிக சிரமாக உள்ளது என்று அந்த முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் அதிகாரி தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்