நிதி திரட்டும் ஓட்டத்தை தொடங்கிறார் மூவார் எம்.பி.

தனது மக்கள் சேவை மையத்திற்கு சுமார் ஒரு லட்சம் வெள்ளி நிதியை திரட்டுவதற்காக 200 கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கிய Langkah Muar எனும் மூவர் நகர்வு நெடுந்தூர ஓட்டத்தில் ஈடுபடப் போவதாக மூவார் எம்.பி. Syed Saddiq Syed Abdul Rahman அறிவித்துள்ளார்.

தனது மூவார் நாடாளுமன்றத்தொகுதியின் மக்கள் சேவை மையத்திற்கு கூட்டரசு அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு மானியமும் கிடைக்கவில்லை என்று Syed Saddiq குறிப்பிட்டுள்ளார்.

நிதி தேவைப்படக்வடிய மக்களுக்கு உதவவும், அவர்களின் சிரமங்களில் பங்கு கொள்ளவும் தனது சேவை மையம் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்வதற்கு ஒரு லட்சம் வெள்ளியை திரட்டுவதற்கு இந்த நெடுந்தூர ஓட்டதை மேற்கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அரசாங்க ஆளும் கட்சி நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஆண்டுக்கு 40 லட்சம் வெள்ளி என்ற அளவில் 5 ஆண்டுகளுக்கு 2 கோடி வெள்ளி வழங்கப்படுவதாக Syed Saddiq குறிப்பிட்டார்.

தற்போது எதிர்தரப்பில் தாம் இருக்கும் பட்சத்தில் 2 கோடி வெள்ளியை திரட்டுவது என்பது சாத்தியமில்லை. குறைந்த பட்சம் மக்கள் சேவை மையம் செயல்படுவதற்கு ஒரு லட்சம் வெள்ளி தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற கட்டடத்திலிருந்து மூவாருக்கு 200 கிலோ மீட்டர் தூர நெடுந்தூர ஓட்டத்தை Syed Saddiq, நாளை வெள்ளிக்கிழமை தொடங்கவிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்