இந்த நெடுந்தூர ஓட்டத்தின் மூலம் சையத் சாதிக் ஒரு லட்சத்து 60 ஆயிரம் வெள்ளியை திரட்டியுள்ளார்.

கோலாலம்பூர், ஜுலை 01-

சுமார் 200 கிலோமீட்டர் தூரம், தனியொரு நபராக நெடுந்தூர ஓட்டத்தை மேற்கொண்ட மூடா கட்சியின் முன்னாள் தலைவரும் மூவார் எம்.பி.யுமான சையத் சாதிக் சைர்ட் அப்துல் ரஹ்மான், இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு தனது நெடுந்தூரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜோகூர், மூவார் பாலத்திலிருந்து தனது நெடுந்தூர ஓடடத்தை தொடக்கிய சையத் சாதிக் – கின் நான்கு நாள் ஓட்டுத்திற்குப் பின்னர் இன்று காலை 9.30 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள மலேசிய நாடாளுமன்றக் கட்டடத்தை வந்தடைந்தார்.

தொகுதி மக்களுக்கு சேவையாற்றுவதற்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு தலா 40 லட்சம் வெள்ளி வீதம் 5 வருடத்திற்கு 2 கோடி வெள்ளி மானிய ஒதுக்கீடு, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கும் வகையில் சையத் சாதிக் இந்த நெடுந்தூரத்தை தொடக்கினார்.

அதேவேளையில் தனது மூவார் நாடாளுமன்றத் தொகுதியின் மக்கள் சேவை மையம் செயல்படுவதற்கு ஒரு லட்சம் வெள்ளியை திரட்டும் நோக்கிலும் சையத் சாதிக் தனியொரு நபராக இந்த நெடுந்தூர ஓட்டத்தை முன்னெடுத்தார்.

நாடாளுமனற கட்டடத்தை வந்தடைந்த சையத் சாதிக் – கிற்கு அவரின் ஆதரவாளர்கள் மலேசியக் கொடியான ஜாலூர் கெமிலாங் – கை போர்த்தி வரவேற்றனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்