பச்சை குத்துவதற்கு வந்த இளைஞர் மானபங்கம்

உடலில் பச்சை குத்துவதற்கு வந்த இளைஞரை ஓரினப்புணர்ச்சி செய்ததாக பச்சை குத்து ஓவியக் கலைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

பெட்டாலிங் ஜெயா, Sungai Way- யில் உள்ள ஒரு வர்த்தக வளாகத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் 37 வயதுடைய அந்த கலைஞர், நேற்று நள்ளிரவு பிடிபட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் ACP Shahrulnizam Jaafar தெரிவித்தார்.

இரவு 10 மணியளவில் தனது வர்த்தக தளத்திற்கு வந்த 24 இளைஞரின் முதுகில் பூ வேலைப்பாடு தன்மையிலான பச்சை குத்துதற்கு முன்பு, உடலில் ஒரு வகையான எண்ணெய்யை அந்த கலைஞர் பூசியதாக கூறப்படுகிறது.

அடுத்த நில நிமிடங்களிலேயே மயக்கம் அடைந்த அந்த இளைஞரை நிர்வாணப்படுத்தி, அந்த நபர் இந்த ஆபாச சேட்டையைப் புரிந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ACP Shahrulnizam குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட இளைஞருக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெய் குறித்து போலீசார் ஆராய்ந்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்