பராமரிப்பு இல்லத்தில் பதின்ம வயது இளைஞரை பகடிவதை புரிந்ததாக நபர் மீது குற்றச்சாட்டு

பத்து பஹாட், ஜுன் 30-

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தை பராமரிப்பு இல்லத்தில் பதின்ம வயது இளைஞர் ஒருவரை வேண்டுமென்றே காயம் விளைவிக்கும் வகையில் பகடிவதை புரிந்த குற்றத்திற்காக நபர் ஒருவர் பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

ஒரு தொழிற்சாலையின் ஊழியரான 20 வயது அந்நபர் மாஜிஸ்திரேட் சுஹைலா ஷஃபியுதீன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது தம் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார்.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் ஓர் ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 323 ஆவது பிரிவின் கீழ் அந்நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் ஜோகூர், தமன் கோபராசி – யில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு இல்லத்தில் 11 வயது இளைஞர் ஒருவரை வேண்டுமென்று காயம் விளைவிக்கும் வகையில் பகடிவதை புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்