பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் ஒன்று, ஜோ லோவுக்கு சொந்தமானது

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 30-

ஜெர்மனி, முனிச்சில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள புகாட்டி வெய்ரான் வகையிலான நான்கு ஆடம்பர வாகனங்களில் ஒன்று, உள்நாட்டு அமலாக்கத்தரப்பால் தேடப்பட்டுவரும் வர்த்தகர் ஜோ லோ என்றழைக்கப்படும் லோ தெக் ஜோ வாங்கியது என்று மலேசியா ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

1MDB நிதியிலிருந்து அந்த வாகனத்தை அவர் வாங்கியதாகவும் எஞ்சிய மூன்று வாகனங்களும் இதர மூவருக்கு அவர் கையூட்டாக வழங்கியதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது. அம்மூவரது பெயர்களும் ஏற்கனவே SPRM-மின் விசாரணை பட்டியலில் இருப்பதாக, அவ்வாணையத்தைச் சேர்ந்த தரப்பு ஒன்று கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது, சம்பந்தப்பட்ட ஆடம்பர வாகனங்கள் குறித்த மேற்கட்ட தகவலை வழங்கும்படி, SPRM, ஜெர்மனி அரசாங்கத்திற்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளது.

இதற்கிடையில், 1MDB நிதி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணை குறித்து SPRM-மின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி தம்மிடம் விவரித்திருப்பதாகவும் அவ்வாணையம் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு, உதவிகள் வழங்கப்படும் எனவும் அரச மலேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் உறுதியளித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்