பல்வேறு கையூட்டு தொடர்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது

கோலாலம்பூர், ஜுன் 30-

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பல்வேறு கையூட்டு குற்றங்களின் அடிப்படையில் 2 ஆயிரத்து 332 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.

லஞ்சம் பெறுதல் மற்றும் வழங்குதல், பொய்யான கோரிக்கையை சமர்பித்தல், அதிகாரத்தை பயன்படுத்தி கையூட்டு பெறுதல் உட்பட பணமோசடி புரிதல் போன்ற குற்றங்களுக்காக 16 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக SPRM – மின் சமூக கல்வி பிரிவின் இயக்குநர் நஸ்லி ரசித் சுலோங் அறிவித்தார்.

இளைஞர்களிடையே இதுபோன்ற குற்றச்செயல்களை தடுப்பதற்கு தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், இளைஞர்கள் தங்களின் வாழ்கையில் இத்தகைய கையூட்டு பெறுவதை பழக்கமாக்கி கொள்ளாமல் இருக்க பிரச்சாரங்கள் நடத்தப்பட வேண்டும் என்று நஸ்லி ரசித் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்