பாசீர் கூடாங் வழக்கில் 640,000 வெள்ளி அபராதம் விதிப்பு

கடந்த 2019 ஆம் ஆண்டில் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜோகூர், Pasir Gudang- கில், காற்று தூய்மைக்கேடு சம்பவத்திற்கு காரணமான நிறுவனத்திற்கு ஜோகூர் பாரு உயர் நீதிமன்றம் இன்று 6 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.

Pasir Gudang, P Tech Resources என்ற நிறுவனமே காற்று மாசுப்பாட்டிற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி, அந்த நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபாரதத் தொகையை உயர் நீதிமன்றம் இரட்டிப்பாக உயர்த்தியது.

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் 2014 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டனர். அவர்களுக்கு எதிராக எட்டு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 80 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது

பாசீர் கூடாங்கில் பிரதான நதியான Sungai Kim Kim ஆற்றில் கொட்டப்பட்ட நச்சு கழிவினால், காற்று தூய்மைக்கேடு ஏற்பட்டு அந்த வட்டாரத்தையே வெகுவாக பாதிக்கச் செய்தது.

இதில் உயிர் சேதம் எதுவும் இல்லையென்றாலும், இரண்டாவது முறையாக ஏற்பட்ட காற்று தூய்மைகேடு பாசீர் கூடாங் வட்டார மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவ்வட்டார மக்களில், குறிப்பாக குழந்தைகளின் சுகாதாரம், இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்