பாதிக்கப்பட்ட 120,000 பேருக்கு நாளை காலை நீர் விநியோகம்

பிறாய் ஆற்றின் அடியில் தண்ணீர் குழாய் உடைந்ததைத் தொடர்ந்து Barat Daya மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் நீர் விநியோகத் தடையைச் சந்தித்து வருகின்றனர். நாளை அதிகாலைக்குள் அவர்களுக்கு நீர் விநியோகம் வழக்கு நிலைக்குத் திரும்பி விடும் என பினாங்கு மாநில தண்ணீர் வாரியமான akaun Perbadanan Bekalan Air Pulau Pinang தெரிவித்துள்ளது

தற்போது உடைந்த குழாயைச் சரி செய்யும் பணியில் முதற்கட்டம் 70 விழுக்காடு நிறைடைய உள்ள நிலையில், மிக விரையில் மக்களுக்கு நீர் விநியோகம் கிடைத்துவிடும் என பினாங்கு மாநில முதலமைச்சர் Chow kon yeow தெரிவித்தார்,

அதே சமயம், புதிய குழாய் பொருத்தும் பணிகளுக்கு 16 மணி நேரம் தேவைப்படும் என்பதால், அட்டவணை இடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில், நீர் விநியோகம் முழுமையாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சரியாகி விடும் என அவர் மேலும் சொன்னார். 

இரண்டு நாட்களுக்கு முன்னர், பிறாய் ஆற்றின் அடியில் தண்ணீர் குழாய் உடைந்தது. கடந்த ஆண்டு டிசம்பரிலும் இவ்வாண்டு ஜனவரி 12 ஆம் தேதியிலும் இரு முறை தண்ணீர் குழாய்கள் உடைந்த நிலையில், இது மூன்றாவது முறையாகும்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்