பிரச்சார உபகரணங்களை சேதப்படுத்துவதாக போலீசாரிடம் புகார்

நிபாங் தெபால், ஜுன் 30-

பினாங்கு, சுங்கை பகப் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், பிரச்சார உபகரணங்களை சேதப்படுத்துவது தொடர்பில் காவல்துறைக்கு புகார் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து கடந்த வியாழக்கிழமை தமது தரப்பினர் புகார் ஒன்றை பெற்றதாகவும் குற்றவியல் சட்டம் 427 ஆவது பிரிவின் கீழ் இதுக்குறித்து விசாரணை அறிக்கையை திறந்திருப்பதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது கூறினார்.

பிரச்சாரத்தின் 9 ஆவது நாள் ஆகிய இன்றுவரையில் மொத்தம் 81 அனுமதி – களை அங்கீகரித்துள்ளதாக ஹம்சா அகமது இன்று ஓர் ஊடக அறிக்கையில் அறிவித்தார்.

சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே எஞ்சி இருக்கும் நிலையில் பிரச்சாரத்தின் போது எவ்வித ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டாம் என்று ஹம்சா அகமது கட்சியினரை கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்