பிரபலங்களின் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி

பிரபலமாக விளங்கும் தனிநபர்களின் புகைப்படங்களை சமூக வளைத்தளங்களில் ஒரு முக்கிய சாதனமாக பயன்படுத்தி பண மோசடி நடவடிக்கைகளை போலீசார் அணுக்கமாக கண்காணித்து வருவதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றத் தடுப்பு பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட பிரபலங்களின் புகைப்படங்களை சமூக வளைத்தளங்களில் , விளம்பரம் செய்து, இந்த மோசடி வேலைகள் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய மோசடி கும்பல்களின் மாய வலையில் பொது மக்கள் சிக்கிவிட வேண்டாம் என்று ரம்லி முகமது ஆலோசனைக் கூறியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்