புளுவேலியில் நிகழ்ந்த நிலச்சரிவுக்கு கனமழையே காரணம்

ஐவர் உயிருடன் புதையுண்ட கேமரன்மலை, Kampung Batu 54, Blue Valley நிலச்சரிவு சம்பவத்திற்கு கனத்த அடை மழையே காரணமாகும் என்று மலேசிய கனிம வள, புவியியல் இலாகா தெரிவித்துள்ளது.

இந்த நிலச்சரிவு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை கனத்த மழை பெய்துள்ளது.

மொத்த மழையளவு 126 மில்லி மீட்டராக மழைமானியில் பதிவாகியிருப்பதாக அத்துறை தெரிவித்துள்ளது. இது மலைப்பாங்கான பகுதிகளில் குறிப்பாக மலைச்சாரல்களில் நிலச்சரிவுக்கு வித்திடுவதற்கான அபாயம் அதிகமாக இருப்பதாக அவ்விலாகா குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்