பெட்ரோல், டீசலை கடத்துவதற்காக 90 சதவீத வாகனங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன

கோத்தா பாரு , ஜுன் 30

கடந்த மூன்று ஆண்டுகளில், கைப்பற்றப்பட்ட மொத்தம் 550 வாகனங்களில் ஏறக்குறைய 90 சதவீத வாகனங்கள் பெட்ரோல், டீசலை கடத்துவதற்கு மாற்றியமைக்கப்பட்டவையாகும்.

மாற்றியமைக்கப்படுகின்ற வாகனங்களின் தங்கி – கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்ற புரோட்டான் வீரா, புரோட்டான் வாஜா போன்ற பழைய மாடல்களாக இருப்பதுடன் சாலை வரி ஏதுமின்றி கண்டறியப்படுவதாக கிளந்தான் , உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சகத்தின் இயக்குநர் அஸ்மான் இஸ்மாயில் தெரிவித்தார்.

ஒருமுறை மட்டுமே கிட்டத்தட்ட 200 லீட்டர் பெட்ரோல் அல்லது டீசலை நிரப்புவதற்கு அந்த வாகனங்கள் மாற்றியமைக்கப்பட்டிருப்பதாக அஸ்மான் இஸ்மாயில் கூறினார்.

மேலும், கடந்த ஜனவரி முதல் நேற்று வரையில் மொத்தம் 29 ஆயிரத்து 932 லீட்டர் RON95 பெட்ரோல் உட்பட 68 ஆயிரத்து 858 லீட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அஸ்மான் இஸ்மாயில் தகவல் அளித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்