பெர்னாமா தொலைக்காட்சி காணொளியை அகற்ற உத்தரவு

ஃபேஸ்புக் பதிவில் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தவறாக பதிவேற்றம் செய்யப்பட்ட பெர்னாமா தொலைகாட்சி செய்தியின் காணொளியை அகற்றுமாறு மெட்டா நிறுவனத்திடம் தொடர்பு மற்றும் பல்லூட ஆணையமான MCMC கேட்டுக் கொள்ளும்.

சந்தேகத்திற்குரிய பெர்னாமா தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர் ஒருவர் இடம்பெற்றுள்ள முதலீட்டுத் திட்டம் குறித்த காணொளிப் பதிவை தாமே MCMC. க்கு அனுப்பியதாக தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

“இம்மாதிரியான மோசடி செய்பவர்கள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற காணொளிகளை உருவாக்குவது இது முதல் முறையல்ல. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் காணொளியைப் பயன்படுத்தி செய்யப்பட்ட ஒரு மோசடி செயலும் இதற்கு முன்பு வந்திருந்தது. மேலும் அவரது பேச்சும் அதில் மாற்றப்பட்டு முதலீட்டு திட்டங்களில் பொதுமக்களை பங்கேற்க அழைப்பு விடுப்பது போல் இருந்தது” என்றார்.

“இந்த AI தொழில்நுட்பம் பல நன்மைகளைக் கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. இருப்பினும் இது மோசடி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் போது அபாயமும் உள்ளது.

எனவே இதுபோன்ற காணொளிகைளை பொதுமக்கள் பார்க்கும்போது, உடனடியாக மெட்டா அல்லது எம்.சி.எம்.சியிடம் புகாரளிக்க வேண்டும்” என்று விஸ்மா பெர்னாமாவில், பெர்னாமா தொலைக்காட்சியின் THE NATION எனும் நிகழ்ச்சியில் பிரமுகராக கலந்து கொள்வதற்கு முன்பு அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்