பெர்மிட்யின்றி நிகழ்ச்சியை நடத்தியதற்காக இந்தியாவைச் சேர்ந்த கலைஞர் கைது, மலேசிய இசையமைப்பாளர் சங்கம் ஆதரவு

கோலாலம்பூர், மே 03-

கோலாலம்பூரில் உள்ள பிரபல இன்னிசை மையத்தில் பெர்மிட்யின்றி இசை நிகழ்ச்சியை நடத்திய இந்தியாவைச் சேர்ந்த கலைஞரை மலேசிய குடிநுழைவுத்துறையினர் கைது செய்து இருக்கும் நடவடிக்கைக்கு மலேசிய இசையமைப்பாளர் சங்கமான Music Malaysia தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது.

சுற்றுலா விசாவில் மலேசியாவிற்கு வருகை புரியும் இந்தியாவைச் சேர்ந்த கலைஞர்கள், தங்களின் பயண அனுமதியை தவறாக பயன்படுத்தி, கோலாலம்பூரில் உள்ள இன்னிசை மையங்களை ஆக்கிரமித்துக்கொண்டு நிகழ்ச்சிகளை படைத்து வருவது எந்த வகையிலும் நியாயமில்லை. அவர்கள் அவ்வாறு நிகழ்ச்சியை படைக்க விரும்பினால் முறையான அனுமதியை குடிநுழைவுத்துறையினரிடம் பெற வேண்டும் என்று Music Malaysia-வின் தலைவர் ஃப்ரெடி பெர்னாடஸ் தெரிவித்தார்.

வெளிநாட்டு கலைஞர்கள் மலேசியாவில் படப்பிடிப்பு நடத்துவது உட்பட எந்தவொரு நிகழ்ச்சியை படைப்பதாக இருந்தால், அதற்கு முறையாக விண்ணப்பம் செய்து, உரிய வரியை செலுத்தி அனுமதி பெற வேண்டும்.

ஆனால், சுற்றுலா விசாவில் மலேசியாவிற்கு பயணத்தை மேற்கொண்டு, நாட்டின் சட்டங்களை புறக்கணித்துவிட்டு, பொருள் ஈட்டுவதற்காக ஒவ்வொரு இன்னிசை கிளப்பிலும் நிகழ்ச்சியை படைத்து வரும் இந்தியாவைச் சேர்ந்த கலைஞர்களின் செயல் ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று ஃப்ரெடி பெர்னாடஸ் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்