பொதுச்சேவை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு திட்டமிட்டப்படி அமலாக்கம் காணும்! பிரதமர் உத்தரவாதம்

பொதுச்சேவை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, அறிவித்தது போல் அமல்படுத்தப்படும்.

அதன் அமலாக்கம் குறித்து பொதுச்சேவை ஊழியர்கள் கவலைப்பட வேண்டியதில்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

கொள்கைச் சார்ந்த பணிகளை செய்துமுடித்த பிறகு, எங்கிருந்து கூடுதல் நிதி மூலம் கிடைக்கும் என்பதை அரசாங்கம் கண்டறிந்துள்ளது.

குறிப்பாக, MICROSOFT உள்பட பல அனைத்துலக நிறுவனங்களின் முதலீடுகளை அரசாங்கம் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், அதன் அடிப்படையிலேயே பொதுச்சேவை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டதாக கூறினார்.

இன்னும் அதிகமான முதலீடுகளை கவருவதன் வழி, பொதுச்சேவை ஊழியர்களின் சேவைத் தரமும் நாட்டின் வருமானமும் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக, இன்று நிதியமைச்சின் பணியாளர்களுடனான கூட்டத்தில் உரையாற்றிய போது பிரதமர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்