போலி வாகன கண்ணாடிகளை விற்பனை செய்த கடைகள் சோதனை

புத்ராஜெயா, மே 14-

போலியான வாகன கண்ணாடிகளை விற்பனை செய்ததாக சந்தேகிக்கும் நான்கு இடங்களில் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சகம் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளது.

பொதுமக்களிடமிருந்து கிடைக்க பெற்ற புகாரை அடுத்து புத்ராஜெயா, சிலாங்கூர் உட்பட கோலாலம்பூரை சேர்ந்த அமலாக்க அதிகாரிகள் கடந்த மே 9 ஆம் தேதி சம்பந்தப்பட்ட இடத்தில் சோதனை மேற்கொண்டதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சகத்தின் இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் தெரிவித்தார்.

இச்சோதனையின் போது 140,200 வெள்ளி மதிப்பிலான தவறான வர்த்தக முத்திரைகள் பொருத்தப்பட்டிருக்கும் 153 போலி கண்ணாடிகள், சம்பந்தப்பட்ட வணிக ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டதாக அஸ்மான் அடாம் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

இதில், 20 மற்றும் 31 வயதுடைய இரண்டு உள்ளூர் நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதுடன், வர்த்தக முத்திரைகள் சட்டம் 2019 ஆம் கீழ் இதுக்குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அஸ்மான் அடாம் மேலும் தகவல் வெளியிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்