மடானி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு விழாவை ஒட்டி இலவச சுகாதார பரிசோதனை 

மடானி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு விழாவை ஒட்டி சுகாதார அமைச்சகம் மோபிலாசி மடானி அஃபியட் மற்றும் 800 குடியிருப்புவாசிகளுக்கு இலவச சுகாதார பரிசோதனை மேற்கொண்டதுடன், சுகாதாரப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இந்நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடந்தேறியது. கம்போங் முஹிபா, பிபிஆர் பெர்மாய், பிபிஆர் புக்கிட் ஜாலில், டேவான் ருக்கூன் தெதாங்கா (கேஆர்தி) தாமான் சாலாக் செலத்தான் ஆகிய 380 வீடுகளை உள்ளடக்கிய பகுதிகளில் சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சர், டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.

கே.கே.எம் யை பொருத்தவரையில் மடானி அஃபியாட் திட்டம் என்பது மடானி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு விழாவினை ஒரு முடிவுக்குக் கொண்டு வர முன்னுரிமை வழங்கப்படும் ஓர் அங்கீகாரமாகும் என்றார் டாக்டர் ஜாலிஹா.

இந்நிகழ்வில் 135 உறுப்பினர்களை உள்ளடக்கிய சுகாதார அமைச்சகத்தின் பயிற்சி நிறுவன பயிற்சியாளர்கள், சுகாதார மற்றும் தாதியர்கள், 50 மருந்தக அலுவலர்கள் ஆகியோர் வீடு வீடாக சென்று சுகாதார பரிசோதனையை மேற்கொண்டனர் என்று அவர் கூறினார்.

தற்போது கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்குமாறு டாக்டர் ஜாலிஹா பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்