மது போதையில் வாகனம் செலுத்திய 32 பேரை போலீசார் கைது

ஜோகூர் பாரு, ஜுன் 30-

இவ்வார இறுதியில், ஜோகூர் மாநிலத்தில் மேற்கொண்ட இரண்டு நாள் போக்குவரத்து அமலாக்க சோதனையின் போது மது போதையில் வாகனத்தை செலுத்திய குற்றத்திற்காக 30 ஆண்களையும் 2 பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அதை தொடர்ந்து, ஓட்டுநர் உரிமமின்றி வாகனத்தை ஓட்டியதற்காக 16 வயது பதின்ம வயது இளைஞர் ஒருவரும் மற்ற பயனர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கவனக்குறைவாக வாகனத்தை பயன்படுத்திய குற்றத்திற்காக இருவர் பிடிபட்டதாக ஜோகூர் போலீஸ் தலைவர் கமிஷனர் எம். குமார் கூறினார்.

மது போதையில் வாகனத்தை செலுத்திய குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு 30 ஆயிரம் வெள்ளி அபராதம், இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வகை செய்யும் குற்றவியல் சட்டத்தை அவர்கள் எதிர்நோக்கியிருப்பதாக எம். குமார் தெரிவித்தார்.

இதில் 1,417 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 1,302 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளை, பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் 481 போக்குவரத்து சம்மன்கள் வழங்கப்பட்டதாக குமார் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்