மரண விசாரணை கோருகின்றனர் குடும்பத்தினர்

பினாங்கில் உள்ள போலீஸ் குடியிருப்புப்பகுதியில் இறந்த கிடந்த ஓர் ஆடவரின் மரணம் தொடர்பில் மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வரும் சனிக்கிழமை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் ஒரு மகஜரை சமர்ப்பிக்கவிருக்கின்றனர்.

சம்பந்தபட்ட நபரின் மரணத்தில் குற்றத்தன்மை இல்லை என்று போலீசார் அறிவித்துள்ளனர். ஆனால், அந்நபர் எவ்வாறு போலீஸ் குடியிருப்புப்பகுதியில் இறந்த கிடந்தார் என்று குடும்பத்தினர் கேள்வி எழுப்பினர்.

சம்பவம் நிகழ்ந்து 100 நாட்கள் ஆனப்பின்னரும் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய முடியவில்லை என்று குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்