மரம் வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்தது

பினாங்கு, மே 11-

பினாங்கு, ஜாலான் மேக் அலிஸ்டர் சாலையில் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் ராட்ஷச மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்ததில் உயிருடன் சேதம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் ஹோட்டல் ஒன்றின் அருகில் இருந்த அந்த ராட்ஷச மரம், பலத்த சத்தத்திற்கு மத்தியில் ​கீழே சாயும் காட்சியைக் கொண்ட கா​ணொளி தற்போது ச​மூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

மரத்தின் கிளைகள் முறிந்து சாலையில் நாலாபுறமும் சிதறிக்கும் கிடக்கும் நிலையில் அவற்றை வெட்டி, சா​லையை சுத்தம் செய்யும் பணியில் ​தீயணைப்பு, மீட்புப்படையினர் முழு வீச்​சில் ஈடுபட்டு வருகின்றனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்