மலாய் வாக்காளர்கள் ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்க தொடங்கியுள்ளனர்

நிபோங் தேபால், ஜுன் 30-

பினாங்கு, சுங்கை பகப் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, அப்பகுதியிலுள்ள மலாய் வாக்காளர்கள் மீண்டும் ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்க தொடங்கி உள்ளனர்.

அப்பகுதியில் 48 சதவீதம் மலாய்க்காரர்கள் மட்டுமே பேரிக்காத்தன் நேஷனல் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக பிகேஆர் கட்சியின் துணைத்தலைவர் ரபிசி ரம்லி அறிவித்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நிகழ்ந்த அம்மாநில தேர்தலில் சுமார் 77 சதவீத மலாய்க்காரர்கள்பேரிக்காத்தன் நேஷனல் கட்சியை ஆதரித்தனர்.

இம்முறை 29 சதவீதத்திற்கு குறைவாகவே மலாய் வாக்காளர்கள் பேரிக்காத்தன் நேஷனல் – லை ஆதரிப்பது காணப்படுவதாக ரபிசி ரம்லி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்