மலாய் வாக்காளர்கள், பொதுச்சேவை ஊழியர்களின் ஆதரவு, ஒற்றுமை அரசாங்கத்திற்கு கிடைத்ததில் பெர்சத்து கட்சி கவலைக்கொள்ளவில்லை.

கோல குபு பாரு, மே 15-

கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், மலாய் வாக்காளர்கள், பொதுச்சேவை ஊழியர்கள் முதலானோரின் ஆதரவு, ஒற்றுமை அரசாங்கத்திற்கு அதிகரித்துள்ளதைக் கண்டு, பெரிக்காதான் நசியனால் கூட்டணி கவலைக்கொள்ளவில்லை என பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் வான் அஹ்மத் ஃபய்சல் வான் அஹ்மத் கமல் தெரிவித்தார்.

நடந்து முடிந்த இடைத்தேர்தல் முற்றிலும் ஒருதலைபட்சமாகவே நடந்தது. வாக்காளர்களைக் கவர, இனிப்பு வார்த்தைகள், அரசியல் கையூட்டுகள் போன்று அரசாங்கத் தரப்பு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான நடப்பு ஒற்றுமை அரசாங்கம், போலியான சீர்த்திருத்த அரசாங்கம் போல் செயல்படுகின்றது.

முன்பு, தேர்தல் காலங்களில், அப்போதைய அரசாங்கங்கள் பல்வேறு சலுகைகளை அறிவிக்கும்போது, அவற்றை எல்லாம் கடுமையாக எதிர்த்திருந்த அவர், தற்போது, பிரதமர் ஆனதும் அதே பழைய பாணியிலான அணுகுமுறையை தொடர்வதாக வான் அஹ்மத் ஃபய்சல் வான் அஹ்மத் கமல் சாடினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்