மாணவி லதாவிற்கு டாக்டர் சிவபிரகாஷ் நிதி உதவி

கோலாலம்பூர், மார்ச் 8 –

உள்ளூர் பொது பல்கலைக்கழகத்தில் பியோமேடிக் தொழில் நுட்பத்துறையில் பயின்று வந்த மாணவி லதா, மூன்று மாத காலத்திற்கு துறை சார்ந்த தொழில் பயிற்சியை மேற்கொள்வதற்கு வரும் மார்ச் 11 ஆம் தேதி இந்தியா செல்லவிருக்கிறார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, மூடா கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவரும், உலுசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் மூடா கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் R. சிவபிரகாஷ்ஸை வந்து சந்தித்த மாணவி லதா, இன்டெர்ன்ஷிப் பயிற்சிக்கு தமக்கு தேவைப்படக்கூடிய நிதி குறித்து விளக்கினார்.

இளம் மாணவர்களின் உயர் கல்விக்கு மக்கள் மிகுந்த ஒத்துழைப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் அந்த மாணவிக்கு டாக்டர் சிவபிரகாஷ் கணிசமான நிதி உதவியை வழங்கி, அந்த மாணவி கல்வியில் உயர்வு பெற வாழ்த்தி அனுப்பிவைத்தார்.

B40 குடும்பங்களின் பிள்ளைகளின் உயர்வுக்கு கல்வியே அடித்தளம் என்று வலியுறுத்திய டாக்டர் சிவபிரகாஷ், உயர் கல்வியை மேற்கொள்ளும் பிள்ளைகளுக்கு நிதி நெருக்கடி அவர்களின் கல்விக்கு ஒரு தடைக்கல்லாக இருக்கக்கூடாது. மாறாக, வசதிப் படைத்தவர்களும் தனவந்தகர்களும் அவர்களுக்கு உதவிட வேண்டும் என்றார்.

இதேபோன்று உலு சிலாங்கூர், புக்கிட் பெருந்துங் வில் புதிய கல்வியாண்டில் பள்ளிக்கு திரும்பவிருக்கும் B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை வழங்கி உதவிக் கரம் நீட்டியுள்ள பெர்சாத்துவான் கெபாஜிக்கான் வானித்தா புக்கிட் பெருந்துங் மகளிர் சமூக அமைப்பபையும் டாக்டர் சிவபிரகாஷ் வெகுவாக பாராட்டினார்.

திருமதி ரதி தலைமையிலான அந்த மகளிர் அமைப்பின் இத்தகைய செயல்பாட்டை இதர அரசாங்க சார்பற்ற அமைப்புகளும் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்று டாக்டர் சிவபிரகாஷ் வலியுறுத்தினார். .

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்