மாஸ்கோ தாக்குதலுக்கு உக்ரைன் மூளையாக செயல்பட்டிருக்கலாம், புதின் சந்தேகம் தீவிரமடையும் போர்

மாஸ்கோ: கடந்த 22ம் தேதி இரவு ரஷ்யாவில் இசை கச்சேரி நடந்த அரங்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில் 137 பேர் கொல்லப்பட்ட நிலையில் இதன் பின்னணியில் உக்ரைன் இருக்கலாம் என்று ரஷ்ய அதிபர் புதின் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

கடந்த 22ம் தேதி இரவில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ‘பிக்னிக்’ எனும் ராக் இசைக்குழுவினர் கச்சேரியை நடத்தியிருந்தனர். இந்த கச்சேரியில் அடையாளம் தெரியாத 3-5 நபர்கள் கொண்ட குழு உள்ளே புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் 137 பேர் கொல்லப்பட்டதுடன் 182 பேர் படுகாயமடைந்தனர். இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கிகளுடன் வெடிபொருட்களையும் பயன்படுத்தியதால், கச்சேரி நடந்த கட்டிடம் தீ பற்றி எரிந்தது.

இந்த சம்பவம் குறித்து மாஸ்கோ மேயர் சோபியான் கூறுகையில், “குரோகஸ் சிட்டி மையத்தில் பயங்கரமான சம்பவம் நடந்திருக்கிறது. இதில் உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலியையும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்