மின்சாரக் கட்டண சீரமைப்பில் 85 விழுக்காட்டினர் பாதிக்கப்படமாட்டார்கள்

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து ஜுன் 30 ஆம் தேதி வரையில் மின்சாரக் கட்டணம் சீரமைக்கப்படவிருக்கிறது.

இந்த கட்டண சீரமைப்பில் தீபகற்ப மலேசியாவில் உள்ள மின்சார பயனீட்டாளர்களில் 70 லட்சம் வீட்டு பயனர் அல்லது 85 விழுக்காட்டினர் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று எரிசக்தி ஆணையம் தெரிவித்துள்ளது.

99.0 விழுக்காட்டினர் அல்லது 82 லட்சம் பயனர், தங்கள் மின்சார பயன்பாட்டிற்கு இன்னமும் அரசாங்கத்தின் உதவித் தொகையைப் பெற்று வருவதால் அடுத்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்டும் கட்டண சீரமைப்பு, அவர்களை பாதிக்காது என்று எரிசக்தி ஆணையம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மின்சக்தி பயன்பாட்டை அளவிடும் குறியீடான மணிக்கு 600 கிலோ வோட்டிற்கு அல்லது அதற்கும் குறைவான மின்சக்தியை பயன்படுத்தும் வீட்டு பயனருக்கு ஒவ்வொரு கிலோ வோட்டிற்கும் 2 காசு கட்டண தள்ளுபடி வழங்கப்படுவதாக அந்த ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்