மின்சுடலை பணியாளர் கடும் காயங்களுக்கு ஆளானார்

ஜோர்ஜ் டவுன், மார்ச் 2 –

பிரேதத்தை தகனம் செய்யும் இடத்தில், மின் சுடலை பணியாளருடன் தகராற்றில் ஈடுபட்டதாக நம்பப்படும் இறந்தவரின் குடும்ப உறுப்பினர், மரக்கட்டையைக் கொண்டு தலையில் தாக்கியதில் அந்த மின்சுடலைப் பணியாளர் கடும் காயங்களுக்கு ஆளானார்.

இச்சம்பவம் நேற்று மதியம் 12 மணியளவில் பினாங்கு, ஜார்ஜடவுன், பாது குந்துங் மின்சுடலை வளாகத்தில் நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் கடும் காயங்களுக்கு ஆளாகி மயங்கி விழுந்த 45 வயது மின்சுடலை பணியாளர் பின்னர், சக பணியாளரின் உதவியுடன் பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த தனது தாயாரின் ஆஸ்தியை எடுக்கும் விவகாரத்தில் தங்கள் குடும்பத்தினரின் வேண்டுகோளை பின்பற்றவில்லை என்று கூறி, இறந்தவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர், அந்த மின்சுடலைப் பணியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் 40 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக நான்கு நாள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக Timur Laut மாவட்ட போலீஸ் தலைவர் ராஸ்லாம் அப்துல் ஹாமிட் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்