முதல் முறையாக குறைவான, 13,079 பந்துகளில் 1000 சிக்ஸர்கள்

இந்தியா, மே 09-

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 57ஆவது லீக் போட்டியின் போது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் வீரர் குர்ணல் பாண்டியா 2 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக ஐபிஎல் 2024 கிரிக்கெட்டில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 57ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக முதலில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார். அதன் படி முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.

குயீண்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. பிறந்தநாள் ஹீரோவான பேட் கம்மின்ஸ் வீசிய 2ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர் உள்பட 10 ரன்கள் மட்டும் எடுக்கப்பட்டது. மீண்டும் 3ஆவது வீசிய புவனேஷ்வர் குமாரின் முதல் பந்திலேயே டி காக் 2 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இந்த சீசனில் தொடர்ந்து அவர் மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

இந்த ஓவரில் புவனேஷ்வர் குமார் 2 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். 4ஆவது ஓவரை ஷாபாஸ் அகமது வீசினார். இந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. புவனேஷ்வர் குமார் வீசிய 5ஆவது ஓவரில் முதல் பந்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது.

இதன் மூலமாக இந்த சீசனில் பவர்பிளேயில் மட்டும் புவனேஷ்வர் குமார் 10 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். டெல்லி வீரர் கலீல் அகமது 8 விக்கெட்டும், கேகேஆர் வீரர் வைபவ் அரோரா 7 விக்கெட்டும், ராஜஸ்தான் வீரர் டிரெண்ட் போல்ட் 7 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

பின்னர் எளிய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பேட் கம்மின்ஸ் இன்று தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு டிரீட் கொடுக்கும் வகையில் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் இம்பேக்ட் பிளேயராக அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

டிராவிஸ் ஹெட்டைத் தொடர்ந்து அபிஷேக் சர்மா 19 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். கடைசியில் இருவரும் சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9.4 ஓவர்களிலேயே 167 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. 

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்