மூன்று பேர் கொண்ட குடும்பம் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்

ஹுலு சிலாங்கூர், ஜாலான் கெந்திங் லாமா – பத்தாங் காளி அருகிலுள்ள ஆற்றில் மூன்று பேர் கொண்ட குடும்பத்தின் உடல் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் கண்டெக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 1.09 மணியளவில் தீயணைப்பு நிலையத்திற்கு கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர், மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் இயக்குநர் வான் எம்டி ரசாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

கோலா குபு பாரு தீயணைப்பு நிலையத்திலிருந்து 12 தீயணைப்பு வீரர்கள் உட்பட வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்றதாக வான் எம்.டி ரசாலி கூறினார்.

சம்பவ இடத்தில் ஒரு ஆண், ஒரு சிறுவன் உட்பட ஒரு பெண் ஆகியோர் நீரில் மூழ்கிய இடத்திலிருந்து 30 மீட்டர் தொலைத் தூரத்தில் கண்டறியப்பட்டதாக அவர் ஓர் அறிக்கையில் இன்று அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்