யானை மிதித்து ஓராங் அஸ்லி பரிதாப மரணம்

மதம் பிடித்த யானை மிதித்து ஓராங் அஸ்லி- ஒருவர், பரிதாபமாக மாண்டார். இச்சம்பவம் நேற்று மாலை 5.40 மணியளவில் பேரா, கெரிக், கெமார், கம்போங் லெர்தார் மறுகுடியேற்றப் பகுதிக்கு அருகில் நிகழ்ந்தது

அலாங் அலுய் என்ற 65 வயதுடைய அந்த பூர்வக்குடி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது என்று கெரிக் மாவட்ட போலீஸ் தலைவர் சுல்கிப்லி மஹ்மூத் தெரிவித்தார்.

வனப்பகுதிக்கு அருகில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்ற அந்த பூர்வகுடி, வெகுநேரமாகியும், வீட்டிற்கு வராததைத் கண்ட உறவினர்கள், அவரை தேடிக்கொண்டு அந்த நிலப்பகுதிக்கு சென்ற போது அவர் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக சுல்கிப்லி மஹ்மூத் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்