லஞ்சம் பெற்றதற்காக வழக்கறிஞர் நான்கு நாட்கள் தடுப்புக்காவல்

ஈப்போ, மே 09-

தொழிலதிபரிடமிருந்து 16 லட்ச வெள்ளியை கையூட்டு பெற்றது தொடர்பில், புலன் விசாரணைக்கு உதவும் வகையில் வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு நான்கு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

30 வயது மதிக்கத்தக்க அந்த வழக்கறிஞர் இன்று ஈப்போ நீதிமன்றத்தில் உதவி தலைமை பதவி அதிகாரி நூர் அஸ்ரீன் லியானா முகமட் தாருஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கான தடுப்பு காவல் அனுமதியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் பெற்றது.

2009 ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டத்தின் கீழ் அந்த வழக்கறிஞர் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று, இரவு 11 மணியளவில் ஈப்போ, ஜாலான் கோலா கங்சார் -ரில் உள்ள ஒரு உணவகத்தில் தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 16 லட்ச வெள்ளியை லஞ்சமாக பெற்றதற்காக சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை பேராக் எஸ்.பி.ஆர்.எம் கைது செய்தனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்