லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிலிருந்து முகைதீன் விடுவிப்பை ரத்து செய்தது அப்பீல் நீதின்றம்

புத்ரா ஜெயா, பிப்ரவரி 28 –

  • 4 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை முகைதீன் எதிர்நோக்கியே ஆக வேண்டும்*

மொத்தம் 23 கோடியே 25 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான 4 குற்றச்சாட்டுகளிலிருந்து முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினை விடுதலை செய்து இருக்கும் உயர் நீதிமன்றத் தீர்ப்பை புத்ரா ஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.

முகைதீனின் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து, அவருக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்று பிராசியூஷன் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி தந்தது.

இதனை தொடர்ந்து 76 வயதான டான்ஸ்ரீ முகைதீன் யாசின், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தனக்கு எதிரான நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை எதிர்நோக்கியே ஆக வேண்டும் என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்துக் ஹட்ஹாரியா சியட் இஸ்மாயில் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முகைதீன் யாசினினை நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்து இருக்கும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து துணை பப்ளிக் பிராகியூட்டர் செய்து கொண்ட மேல்முறையீட்டு விண்ணப்பத்தில் தகுதிபாடு இருப்பதாக நீதிபதி டத்துக் ஹட்ஹாரியா தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

துணை பப்ளிக் பிராசிகியூட்டரின் மேல்முறையீட்டை சக நீதிபதிகளான டத்துக் அஸ்மி அரிபின் மற்றும் Datuk ஸ்.ம் கோமதி சுப்பையா ஆகியோருடன் இணைந்து நீதிபதி டத்துக் ஹட்ஹாரியா செவிமடுத்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்