வங்கிக் கடனைச் செலுத்தியும் வீடு இன்னும் கிடைக்கவில்லை

ஷா ஆலாமில் உள்ள கம்போங் பூங்கா ராயாவில் 30 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மக்களின் நிலப் பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை என அங்கு வசித்து வரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

1993இல் தற்போதுள்ள பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட இந்த மக்களுக்கு Rumah Panjang கட்டிக் கொடுக்கப்பட்டு 2 ஆண்டுகள் தற்காலிகமாக வசிக்கச் சொல்லப்பட்டனர்.

பின்னர், 25 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள குறைந்த விலை தரை வீடுகள் Rumah Kos Rendah கட்டித் தரப்படும் என்ற வாக்குறுதியம் மாநில அரசால் இங்குள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், அது மனக்கோட்டையாக மட்டுமே போய் விட்டது என பெர்சத்து கட்சியின் Bersekutu பிரிவின் சிலாங்கூர் மாநிலத் துணைத் தலைவர் கானா தெரிவித்தார்.

இங்குள்ள மக்கள் பிரச்சனை குறித்து சமூக ஊடகத்தின் வாயிலாகத் தெரிந்து கொண்ட. அவர், பாதிக்கப்பட்ட கம்போங் பூங்கா ராயா மக்களை நேரில் வந்து சந்தித்தார்.

இவர்களின் வீடு தொடர்பில் சில குத்தகையாளர்கள் மாற்றம் கண்டு, குடியிருப்பாளர்கள் சிலரின் பெயரிலேயே வங்கியின் வீட்டுக் கடன் பெற்று அந்தக் கடம் 15 ஆண்டுகளில் கட்டியும் முடிக்கப்பட்டு விட்டது. ஆனால், வீட்டைத்தான் காணவில்லை என்று இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

உரிய ஆவணங்களின் நகலைப் பெற்று தம்மால் இந்த மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ, எவ்வளவு சுமூகமாகவும் முறையாகவும் இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட முடியுமோ, அந்த வகையில் தம்முடைய பங்கு நிச்சயம் இருக்கும் என கானா குறிப்பிட்டார்.

வீடு என்பது அடிப்படை வசதி ஆகும். ஆனால், இங்கு பாம்புக் கடி, கொசுக் கடி, தேள் ஆபத்து போன்றவற்றுக்கு நடுவில் இந்த மக்கள் வாழ்ந்து வருவது மிலவும் வேதனை அளிப்பதாக கானா குறிப்பிட்டார்.

மிக விரைவில் அனைத்து ஆவணங்களையும் திரட்டி, மாநில முதல்வரைச் சந்திக்க இருப்பதாகவும் கானா சொன்னார்.

கானாவுடன் பெர்சத்து கட்சியின் Bersekutu பிரிவின் தேசியத் தலைவர் Chongஉம் வருகை புரிந்து மக்களின் பிரச்சனையைக் கேட்டறிந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்