வர்த்தகத்துறையிலே நீடித்து இருந்திருந்தால் எனது சொத்து மதிப்பு 5 ஆயிரம் கோடி வெள்ளியாகும் Tun Daim Zainuddin கூறுகிறார்

அரசியலில் நுழைவதற்கு முன்பே தாம் ஒரு வெற்றி பெற்ற வர்த்தகர் என்றும் கோடிக்கணக்கான வெள்ளி சொத்துக்களை கொண்டு இருந்ததாகவும் முன்னாள் நிதி அமைச்சர் Tun Daim Zainuddin தெரிவித்துள்ளார்.

அரசியலில் ஈடுபடாமல் வர்த்தகத்துறையிலேயே நீடித்திருந்திருந்தால் எனது சொத்துக்களின் பங்குரிமை மட்டும் 5 ஆயிரம் கோடி வெள்ளிக்கும் அதிகமாக இருந்து இருக்கும் என்று தமக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மேற்கொண்டு வரும் விசாரணையில் தமது சொத்து விவரங்களை ஆதரிக்கும் வகையில் வழங்கிய சத்தியப்பிரமாண வாக்குமூலத்தில் 86 வயதான Tun Daim Zainuddin மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.தமது வர்த்தக சகாவுடன் இணைந்து 1969 ஆம் ஆண்டிலேயே நில வர்த்தக மேம்பாட்டில் ஈடுபட்டதாகவும் தமது நிறுவனத்தின் பெயர் Syarikat Maluri Sdn.

Bhd. என்றும் துன் டாயிம் குறிப்பிட்டார்.இன்று கோலாலம்பூர் மையப்பகுதியில் 2,600 கோடி சொத்து மதிப்பை கொண்டுள்ள Taman Maluri, Taman Bukit Maluri போன்றவை தமது நிறுவனத்தால் தோற்றுவிக்கப்பட்டதாகும் என்று துன் டாயிம் குறிப்பிட்டார்.Malaysian French Bank, UMBC போன்றவை தமக்கு சொந்தமான வங்கிகளாகும் என்றும் துன் டாயிம் குறிப்பிட்டார்.தவிர SimeUEP, SIME DARBY, Guthrie, TV3, MayBank, Conspland, Nestle Malaysia உட்பட பல நிறுவனங்கள் தம்முடைய ஆதிக்கத்திலும், கட்டுப்பாட்டிலும் இருந்ததாக துன் டாயிம் தெரிவித்துள்ளார்.Nestle Malaysia – வில் 10 விழுக்காடு பங்குரிமையை தாம் கொண்டுள்ளதாகவும், அந்த பத்து விழுக்காடு பங்குரிமையின் தற்போதைய மதிப்பு 300 கோடி வெள்ளியாகும் என்று துன் மகாதீர் முகமதுவின் நெருங்கிய நண்பரான துன் டாயிம் தமது அப்பிடெவிட் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்