கோலாலம்பூர், ஜன. 20-
மலேசியாவை ஒரு வளர்ச்சி அடைந்த நாடாக அந்தஸ்தை உயர்த்தும் முயற்சியில் அரசாங்கம் அவசரம் காட்டவில்லை என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.
எனினும் நாடு தற்போது சரியான தடத்தில் உள்ளது. 2028 முதல் 2029 க்குள் மலேசியா ஒரு வளர்ச்சி அடைந்த நாட்டிற்கான அந்தஸ்தை அடையும் என்பதற்கு இலக்கு கொண்டு இருப்பதாக ரபிஸி குறிப்பிட்டார்.
தற்போதை வளர்ச்சி கணிப்பின்படி, நாடு ஒரு பொருத்தமான தளத்தில் உள்ளது. ஆசியானின் வியூக நுழைவாயில் என்ற முறையில் அந்நிய முதலீட்டாளர்களின் கவன ஈர்ப்புக்குரிய நாடாக மலேசியா மாறி வருகிறது என்று ரபிஸி தெரிவித்தார்.