விடை பெறும் மாமன்னர் தம்பதியரை வழியனுப்ப வரலாம்

நாளை விடைபெற இருக்கும் மாமன்னர் தம்பதியரை வழியனுப்ப மக்கள் கலந்து கொள்ளலாம் என கோலாலம்பூர் போலீஸ் தலைவர்டத்தோ அல்லாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்தார்.

டத்தாரான் மெர்டேக்கா, புக்கிட் அமான் அடுக்குமாடி கார் நிறுத்துமிடம், தாமான் போட்டானி ஆகிய இடங்களில் மக்கள் தங்களின் வாகனத்தை நிறுத்தி விட்டு மாமன்னருக்கும் அவரது துணைவியாருக்கும் விடை கொடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.

சாலைப் போக்குவரத்தை கவனிக்கவும் பாதுகாப்பினை உறுதி செய்யவும் 91 போலீஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுவர்.

அதே சமயம், மாமன்னருக்கு விடை கொடுக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு தலைநகரின் 7 முக்கியச் சாலைகள் முழுமையாக மூடப்பட உள்ள நிலையில், 13 சாலைகள் நாளை கட்டம் கட்டமாக மூடப்பட உள்ளன என டத்தோ அல்லாவுதீன் தெரிவித்தார்.

மூடப்படும் சாலைகளின் பட்டியலை POLIS KL முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்