விபத்துக்குள்ளான இலகு ரக விமானத்தில் விமானி, துணை விமானியின் உடல்கள் கண்டுபிடிப்பு

காப்பார், 12 ஆவது மைல், Kampung Tok Muda- வில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் இன்று பிற்பகல் 1.30 மணியவில் விழுந்து நொறுங்கிய BK 160 Gabriel ரக இலகு ரக விமானத்திலிருந்து விமானி மற்றும் துணை விமானியின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களின் உதவியுடன் சுமார் 2 மணி நேரம் தீவிர தேடுதலுக்கு பிறகு அந்த இலகு ரக விமானம் கண்டு பிடிக்கப்பட்டன. விமானத்தின் இடிபாடுகளுக்கு இடையில் இருவரின் உடல்களும் சிக்கிக் கிடந்தது தெரியவந்தது.
இடிபாடுகளிலிருந்து அவ்விரு உடல்களையும் மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்ட போதிலும் தீயணைப்பு, மீட்புப்படையினர், பொது தற்காப்பு படையினர் ஆகியோரின் உதவியுடன் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தி, அவ்விருவரின் உடல்களும் மீட்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் Datuk Hussein Omar தெரிவித்தார்.

உயிரிழந்தவர்கள் 30 வயது Daniel Yee Hsisng Khoo என்ற விமானி மற்றும் , 42 வயது Roshaan Singh Rania என்ற துணை விமானி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

1,300 கிலோ எடை கொண்ட அந்த விமானம் கீழே விழுந்ததில் அதன் முன் பகுதி, மண்ணில் சுமார் 2 மீட்டர் ஆழத்தில் செருகிக்கிடந்தது. குடும்ப உறுப்பினர்கள் அடையாளம் காண்பதற்காக அவ்விருவரின் உடல்களும் கிள்ளான் Tengku Ampuan Rahimah மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அந்த .இலக ரக விமானம் விழுந்து கிடக்கும் பகுதியில் விமான விபத்து புலனாய்வுப்பிரிவு விசாரணை செய்யத் தொடங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்