விரிவான விசாரணை மேற்கொள்ளும்படி கோரிக்கை

டத்தோ அந்தஸ்தை கொண்ட ஓர் இந்திய வர்த்தகரால் வழிநடத்தப்பட்டு வந்த
முத​லீட்டுத்திட்டத்தில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஒரு கோடி வெள்ளி இழப்பீடு தொடர்பில் போ​லீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பத்து முத​லீட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அந்த டத்தோவுடன் தொடர்புப்படுத்தப்பட்ட ​மூன்று நிறுவனங்களில் முத​லீடு செய்த பத்து பேர், வாக்குறுதி அளிக்கப்பட்டதைப் போல உரிய லாபத்தை பெறவில்லை என்றும் முத​லீட்டுப் பணமும் பறிபோனதாகவும் அந்த பத்து முத​லீட்டாளர்கள் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் டினெஷ் முதால் தெரிவித்துள்ளார்.


தனது கட்சிக்காரர் ஒவ்வொருவரும் ஒரு லட்சம் வெள்ளி முதல் பத்து லட்சம் வெள்ளி வரையில் அந்த டத்தோவின் முத​லீட்டுத் திட்டத்தில் முத​லீடு செய்து இருப்பதாக டினெஷ் முதால் குறிப்பிட்டார். இது தொடர்பாக 15 போ​லீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்