வெளிநாட்டுத் தொழிலாளர் தருவிப்புக்கானத் தடை தொடர்கிறது – அமைச்சரவையில் முடிவு

வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்கும் அனுமதிக்கான முடக்கம் தொடர்வதாக இன்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது என உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

முடக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர் எண்ணிக்கை ஒதுக்கீட்டின் அளவு போதுமானதாக இருக்கிறது என சைபுதீன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும், வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்க விண்ணப்பம் செய்யவும் அதனை விரைவுப் படுத்தவும் ஒரு மையத்தை நிறுவப்பட அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது.

அதே சமயம், மலேசியாவுக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களை அனுப்பும் 15 நாடுகளுடனான உடன்படிக்கைகளை மீளாய்வு செய்யப்பட உள்ளது.

இருந்தாலும், நேப்பாளம், வங்காளதேசம், இந்தோனேசிய ஆகிய நாடுகளில் இருந்து 77 சதவிகிதம் தொழிலாளர்கள் தருவிக்கப்படுவதால், அந்த 3 நாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.

தற்போது வரையில், Thailand, Kemboja, Nepal, Myanmar, Laos, Vietnam, Filipina, Pakistan, Sri Lanka, Bangladesh, Turkmenistan, Uzbekistan, Kazakhstan, India, Indonesia ஆகிய நாடுகளில் இருந்து மலேசிய தொழிலாளர்களைத் தருவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்