வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மைவி கார்

கோத்தா திங்கி, ஜன – 7,

ஒரு பெண் ஓட்டிச் சென்ற பெரோடுவா மைவி வகை கார் ஒன்று, பெரிய வாய்க்காலில் விழுந்ததைத் தொடர்ந்து பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டது.

இந்தச் சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 15 வினாடிகள் கொண்ட அந்தக் கானொலியில் இடம் பெற்றச் சபவம் கோத்தா திங்கி – மெர்சிங் சாலையில் நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்பட்டு வருகிறது.

வாய்க்காலில் விடுந்த அந்தக் கார் ஓட்டுநரைக் காப்பாற்ற இருவர் அந்த வாய்க்காலில் குதித்தக் காட்சி பதிவாகி இருந்தது. சம்பந்தப்பட்டக் கார் ஓட்டுநரான பெண் காப்பாற்றப்பட்டு நலத்துடன் இருப்பதாகவும் இச்ச,பவம் குறித்து கூடிய விரைவில் காவல் துறையின் அறிக்கை வெளியிடப்படும் என கோத்தா திங்கி போலீஸ் தெரிவித்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்