வெ.1.2 மில்லியன் மதிப்புள்ள சிகரெட்கள் பறிமுதல்

Sandakan, Taman Hing Lee – வில் உள்ள ஒரு வீட்டில் மேற்கொண்ட திடீர் சோதனையில் 1,800 க்கும் மேற்பட்ட சிகரெட் பெட்டிகளை Marin போலீஸ் படையினர் கைப்பற்றினர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் மேற்கொண்ட இச்சோதனையில், அண்டை நாட்டிலிருந்து கடத்தி கொண்டு வரப்பட்டி‌ருப்பதாக நம்பப்படும் 1.2 மில்லியன் வெள்ளி மதிப்பிலான சிகரெட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டன.

வரி விதிக்கப்படாத பொருட்கள் தொடர்பான கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தில் Op Kontraband திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக சபா, Marin போலீஸ் படையின் Asisten Komisioner Ahmad Ariffin தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட வீட்டில் Era Biru, Exsen Blueberry Click உட்பட kretek என மொத்தம் 984,000 சிகரெட்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக Ahmad Arrifin கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்